2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித அபிவிருத்தி திட்டம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இவ்வருட இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள இவ்வேலைத்திட்டங்கள் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளதாக அவர் கூறினார். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இச்செயற்திட்டங்களின் கீழ் 265 கிலோமீற்றர் நீளமான பெருந்தெருக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அத்துடன் மின்சாரம், நீர் வழங்கல் திட்டம் என்பனவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மேலும் வடமாகாணத்திலுள்ள நீதிமன்ற கட்டடங்களை புதுப்பிக்கவும் புதிய கட்டடங்களை நிர்மாணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.இந்த வேலைத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார். (M.M)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .