2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முகாமைத்துவ திறனற்ற அதிபர்கள் நீக்கப்படுவர்: கல்வியமைச்சின் செயலாளர்

Super User   / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

பாடசாலை அதிபர்களில் அதிகமானோருக்கு முகாமைத்துவ திறன் இல்லை என கல்வியமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிரிசேன தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு பிரதிநிதிகளுக்கும் கல்வியமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முகாமைத்துவ திறனற்ற அதிபர்களினாலேயே அதிக பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனால் முகாமைத்துவ திறனற்ற அதிபர்களை இனங்கண்டு  அவர்களை அதிபர் பதவிகளிலிருந்து நீக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் புதிதாக அதிபர்களை நியமிக்க முன்னர் அவர்களுக்கு முகாமைத்து திறன் தொடர்பாக பயிற்சி வழங்கவுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் சிரிசேன தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் பிரச்சினைகள் காணப்படுகின்றது. இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் அதிபர்களின் திறமையின்மையே காரணமாகும் என்றார் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிரிசேன.

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு பிரதிநிதிகள் கல்வியமைச்சின் செயலாளரை சந்தித்து, முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக தொடர்பாக கலந்துரையாடுவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X