2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச தயார்:சம்பந்தன்

Super User   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமனற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.  

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் அவர்களது பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழ் கட்சிகளின் அரங்கம் அழைப்பு விடுத்தால், அது தொடர்பில் எமது கட்சி கலந்தாலோசிக்கும் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணையுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அடுத்த வாரம் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • Saleem Friday, 22 October 2010 10:37 PM

    EPDP தலைவர் டக்லஸ் தேவானந்தாவிற்கும் அவரது பெரிய தலைவர் இராசபக்ஷவுக்கும் பந்தம் பிடிக்கும் கூட்டத்துடன் தமிழ் தேகியக்கூட்ட ணி சேர்வதன் பயன் என்ன ?

    Reply : 0       0

    கி.பாஸ்கரன் Saturday, 23 October 2010 12:43 AM

    அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமாகும். த.தேசிய கூட்டமைப்பு
    தனித்து நின்று எதையும் செய்யமுடியாது.

    Reply : 0       0

    xlntgson Saturday, 23 October 2010 08:57 PM

    சரியாக சொன்னீர்கள் பாஸ்கரன் இந்தியாவில் நம்பிக்கை இழந்தால் மேற்குலம் காப்பாற்றும் என்று இன்னும் நம்பிக்கை வைக்கின்றவர்களை என்ன சொல்ல?

    எப்படியும் அவர்கள் பொருளாதார அகதிகளாக போய் மேற்குலகத்தினரை வணங்காவிட்டால் திருப்தி இல்லை போலும், மேற்குலகமோ தனது சுய நலத்தை மறைக்க இந்தியாவின் சுய நலத்தையே சுட்டிக்காட்டும்
    இந்தியா பிரிவினையை ஆதரித்தால் என்ன நடக்கும்?
    இந்தியா சிதறும் பல நாடுகளாக அதுவே அவர்களது சுயநலம்.

    சீனா இப்போது பலம் பெற்று விட்டதனால் இந்தியாவை சிதைக்க இப்போதைக்கு விரும்ப மாட்டார்கள், உண்மையில்!

    Reply : 0       0

    Saleem Saturday, 23 October 2010 11:01 PM

    EPDP யும் மற்ற அரசாங்கத்துடன் சேர்ந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இராசபக்ஷவின் சொல்லை மீறமாட்டர்கள், அதனால் அவர்களை தமிழ் கட்சிகள் என்று தப்பான கணக்குப்போட்டு பாதாளத்தில் தொப்பென விழுவதில் பயன் என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .