2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சர்வதேச அழைப்புகள் அதிகரிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச அழைப்புகளுக்கான வரியை 0.02 டொலரினால் அரசாங்கம் குறைத்ததையடுத்து இலங்கைக்கான வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகள் அதிகரித்துள்ளதாக  தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனூஷ பெல்பிட்ட டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இதனால், வி.ஓ.ஐ.பி. முறையிலான அழைப்புகளுக்கும் தொலைபேசி வலையமைப்புகளுக்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வி.ஓ.ஐ.பி. பாவனையைக் ஒழிப்பதற்காக இணைய சேவை வழங்குநர்கள் பதிவு செய்துகொள்ளுமாறு எதிர்காலத்தில் கோரப்படுவர். ஆனால், ஏ.டி.எஸ்.எல். தொடர்பை பயன்படுத்துவோர் இப்பதிவு முறையினால் பாதிக்கப்பட மாட்டார்கள்  எனவும் அனூஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X