2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அதிகாரிகளைத் தாக்கிய பிக்கு மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனாநாயக்க)

பல்கலைக்கழக அதிகாரிகளைத் தாக்கிய பிக்கு மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி என்.எல்.ஏ. கருணாரட்ன டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

பிக்கு மாணவர்களின் விடுதியிலுள்ள 105 மாணவர்களில் 20 பேர், மேற்படி தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிக்கு மாணவர்கள் சிலரின் ஒழுங்கீன நடத்தை குறித்து அயலவர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, பல்கலைக்கழக உபவேந்தரும் வேறு சிலரும் பிக்குமாணவர்களின் விடுதிக்குச் சென்றபோது மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகளைத் தாக்கிய மாணவர்கள் இனம்காணப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உபவேந்தர் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .