2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'மதுபான, புகையிலை நுகர்வை குறைப்பதற்கு அனைத்து தரப்பினரதும் உதவி தேவை'

Super User   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நபீலா ஹுஸைன்)

மதுபானம் மற்றும் புகையிலை நுகர்வையும் உற்பத்தியையும் குறைப்பதற்கு சகல தரப்பினரினதும் உதவி தேவை என புகையிலை, மதுபான தேசிய அதிகாரசபையின் தலைவரான பேராசிரியர் கார்லோ பொன்சேகா நேற்று கூறியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் பல பௌத்த அமைப்புகள் தேசிய போதைப்பொருள் கொள்கையை அமுலாக்கும்படி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதை அவர் வரவேற்றுள்ளார்.

குறிப்பாக, ஒமல்பே சோபித தேரர் தனது அரசியல் செல்வாக்கை இதற்குப் பயன்படுத்துவதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக கார்லோ பொன்சேகா தெரிவித்தார்.

கலால் ஆணையாளரின் அறிக்ககைள் மதுபான உற்பத்தி, நுகர்வு என்பன குறைந்துள்ளதாக கூறினாலும் செய்யவேண்டியது இன்னும் நிறையவே உள்ளதென்று தெரிவித்தார்.

புகையிலை, மதுபானத்துக்கான நிழல் அதிகார சபை பற்றி கூறும்போது அவர், பொது நோக்கத்தற்காக அமைக்கப்பட்டுள்ளதென்பது நிச்சயமானது என்றார்.

புகையிலையின் புகை இல்லாத சமுதாயத்தைக் காண ஜனாதிபதி  விரும்புகிறார். பொது இடங்களில் புகைத்தலை இலலாமல் செய்வது சாத்தியமானதே எனவும் கார்லோ பொன்சேகா தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .