2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மோசடி செய்த பரீட்சார்த்திகள் இடைநிறுத்தம்

Super User   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(இந்திக ஸ்ரீ அரவிந்த)

இன்று நடைபெற்ற கொரிய மொழிப்பரீட்சைக்குத் தோற்றியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரீட்சையில் மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டதால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் 13 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இப் பரீட்சைகளில் பரீட்சார்த்திகளில் சிலர் செல்லிடத் தொலைபேசிகளை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டுசென்றனர். அவர்கள் தமது ஆடைகளுக்குள் தொலைபேசிகளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் இப்பரீட்சைகளை அவதானித்த கொரிய அதிகாரிகள் இப்பரீட்சைகள் முறையான வகையில் நடைபெற்றதாகக் கூறினர். அத்துடன் அடுத்த வருடம்கொரியாவில் இலங்கையர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு சதவீதத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .