2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

போஷாக்கு குறைந்த சிறுவர்களுக்கு பால்வழங்கும் திட்டம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மஹிந்த சிந்தனையின் கீழ் சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் போசாக்கு குறைந்த சிறுவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தூய பசும்பாலை எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு முதல் முன்பள்ளி,  முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களில் மட்டும் வழங்குவதற்கு தீரமாணித்துள்ளதாக சிறுவர் செயலகப் பணிப்பாளர் யமுனா பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் போசாக்கு குறைந்த இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையான சிறுவர்களுக்கு தூய பசும்பால் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகின்றது.

பசும் பால் வழங்கும் திட்டம் தொடர்பாக கடந்த ஒகஸ்ட் மாதம் ஜனாதிபதியுடனான திட்ட மீளாய்வு கலந்துறையாடலின் போது இத்தீர்மாணம் எடுக்கப்பட்டதாகவும்,  இப்புதிய தீர்மாணித்திற்கு அமைய  பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள முன்பள்ளிகள் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் , சிறுவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை நவம்பர் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்கவேண்டுமென சகல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் சுற்று நிருபமூடாக அறிவிக்கப்படவுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .