2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

அவசர கால சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்க வேண்டும்: கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

நாட்டில் தற்போதுள்ள அவசர கால சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என கர்தினால் வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த வண. மல்கம் ரஞ்சித்,

இச்சட்டங்களின் மூலம் மக்கள் கைது செய்வது முற்றாக தடுக்கப்பட வேண்டும்.  அத்துடன் ஏனையோரின் கருத்துக்களை புரிந்து கொள்ளும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் மும்மொழிக்கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும்.

தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் அரச கரும மொழியாகவும் தேசியமொழியாகவும் அமுல்படுத்தல்.

அரசாங்கத்தின் மறைமுக அனுமதியோடு மேற்கொள்ளப்படும் குடியேற்றங்க நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இங்கு சாட்சியமளித்த மட்டக்களப்பு திருகோணமலை பேராயர் கிங்ஸ்லி சுவாமி பிள்ளை
:

யாழ்.அல்லைபிட்டி அருட்தந்தை ஜிம் பிரவுன் மற்றும் முல்லைத்தீவு அருட்தந்தை ஜோசப் பிரான்சிஸ் அடங்கலாக பலர் காணமல் போயியுள்ளனர். இதில் சில பதிவு செய்யப்பட்டவை. அதிகமானவை பதிவு செய்யப்படாதவையாகும்.

இது தொடர்பில் விசாரணை செலுத்த வேண்டும். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நேரடியாக தொடர்பு படாதவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என கைது செய்யப்பட்டுள்ள மலைய இளைஞர்கள், தங்கள் இவ்வியக்கத்தில் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

யுத்தத்தால் உயிரிழந்த பலருக்கு இதுவரை மரணச் சான்றிதல் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் உள்ளது. மரணச் சான்றிதல் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நட்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கூறினார்.(Pix By:Waruna Wanniyarachi)  







 

 

 


You May Also Like

  Comments - 0

  • jeyarajah Thursday, 04 November 2010 12:07 PM

    வணக்கத்திற்குரிய பிதா அவர்களே,இனி இலங்கையின் காலம் என்றும் அவசரமாக போகவேண்டியதும் பயங்கரமானதும் தான்.
    அரசியல் சட்டியில் இருந்து நெருப்புக்குள் விழுந்துவிட்டது.எமது நாடு பாகிஸ்தானை விட கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    Reply : 0       0

    jeyarajah Thursday, 04 November 2010 12:08 PM

    வணக்கத்திற்குரிய பிதா அவர்களே,இனி இலங்கையின் காலம் என்றும் அவசரமாக போகவேண்டியதும் பயங்கரமானதும் தான்.
    அரசியல் சட்டியில் இருந்து நெருப்புக்குள் விழுந்துவிட்டது.எமது நாடு பாகிஸ்தானை விட கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    Reply : 0       0

    xlntgson Thursday, 04 November 2010 08:53 PM

    jeyarajah, நீங்கள் எதை குறிப்பிடுகின்றீர்கள் நாடு இராணுவ ஆட்சியை நோக்கி போகிறது என்றா?
    எனக்கு அப்படியாக தெரியவில்லை,
    பல்லாயிரம் மைல்களிலிருந்து ட்ரோன் drone விமானங்களில் வந்து அமெரிக்கர்கள் தாக்கப் போகின்றார்கள் என்றா?
    பாகிஸ்தானும் இந்தியாவும் ஒற்றுமையாகி விடக்கூடாது என்று இரு தரப்பினருக்கும் அணுஆயுதம் வழங்கி வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பதை பற்றியா?
    அதை விட பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பிளவை உண்டு பண்ணிக்கொண்டே இருப்பதை பற்றியா?
    விகிலீக்ஸ் கண்டுபிடிப்புகளுக்கு நோபெல் தரவேண்டும்?

    Reply : 0       0

    jeyarajah Friday, 05 November 2010 11:57 PM

    xin, எவ்வளவு காலம் நாம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.எவ்வளவு அரசியல் பழிவாங்கல்கள்,சர்வாதிகாரத்தை விட ஜனநாயகத்தின் பேரில் சர்வாதிகாரம் மிகவும் ஆபத்தானது.அரசியலில் பழிவாங்கல்கள்
    தொடர்ந்து கொண்டே போகும்.இது மனித நியதி.இதை நண்பர் விளங்கினால் நன்று.நோபல் பரிசு ஒன்றும் தேவையில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .