2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போர்க்குற்றம் காரணமாக கனடாவில் இலங்கையர் கைது

Super User   / 2010 நவம்பர் 04 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போர்க் குற்றங்கள் காரணமாக இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார் என நியூ கேரளா இணையத்தளம் தெரிவித்துள்ளது.  இவர் எம்.வி.சன் ஸீ கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்ற 491 இலங்கையர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வான்கூவரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்நபர் மீதான யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்.

கனேடிய குடிவரவு சட்டங்களின்படி போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவாளியாகக் காணப்பட்ட எவரும் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்விவகாரத்தைக் கையாளும் கனேடிய எல்லை சேவை முகவரகம் இது தொடர்பாக தகவல் எதனையும் கூற மறுத்துள்ளது.

எனினும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  விக் டோவ்ஸின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில் 'இவ்விடயத்தில் நான் சொல்ல முடிந்தது என்னவென்றால், கனடாவானது கிரிமினல் செயற்பட்டாளர்களின் இலக்காக இருக்கும்போது நாம் வெறுமனே அமர்ந்திருக்கமாட்டோம் என்பதுதான்' என்றார்.

கனேடிய அகதிகள் சபையில் சுமார் 80,000 அகதிகளின் விவகாரங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அNதுவேளை கனேடிய சட்டமா அதிபர் 63,000 அகதிகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்களில் 41,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .