2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறை, திருமலைக்கு செல்லும்

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, பொதுமக்களின் சாட்சியங்களை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக  ஆணைக்குழுவின் உப செயலாளர் வருண டி சேரம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

எனினும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான திகதிகள் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தை அடுத்த வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளவுள்ளதாகவும் வருண டி சேரம் கூறினார்.

இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற வேண்டும் என  மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசேப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கிள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.

எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யாழ் மாவட்டத்தில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .