2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை : தயா மாஸ்டர்

Super User   / 2010 நவம்பர் 14 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை நிலவுகிறது என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சிமளிக்கையில் கூறினார்.

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிக்கையிலேயே தயா மாஸ்டர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்இ 'தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை முன்வைக்க முடியுமனால் இனப்பாகுபாட்டை இல்லாமல் செய்ய முடியும். அரசியல் தீர்வுமுயற்சிகளை நீடித்துக்கொண்டு செல்லாமல் உடனடியாக நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.

இலங்கைக்குள் சாத்தியமான தீர்வுதிட்டம் குறித்து அரசு யோசித்துக் கொண்டிருப்பதைவிட அத்திட்டத்தை அமுல்படுத்துவது அவசியம்.

அதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றார்.

தான் முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் முக்கிய நபரொருவராக விளங்கிய போதிலும் தற்போது மனநிறைவுடன் சமூகத்தில் பணியாற்றக்கூடியதாக உள்ளதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

ஊர்காவற்துறையில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது  ஊர்காவற்துறை, மண்கும்பான், நாரந்தனை முதலான இடங்களைச் சேர்ந்த மக்கள் சாட்சியமளித்தனர். பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு, காணாமல் போன தமது உறவினர்களை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
 


You May Also Like

  Comments - 0

  • jeyarajah Monday, 15 November 2010 01:49 AM

    சாய்ந்தால் சாயிற பக்கமே சாயிற செம்மறி ஆடு களா, நீங்களெல்லாம் எப்படி முன்பு புலிகளுக்கு நடித்தீர்கள் என்பதும்,இப்போது நடிக்கிறீர்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு நன்கு
    விளங்கும்.தயவு செய்து இனியாவது வீட்டில் இருங்கள் ,உங்கள் திருமுகங்களைப் பார்த்தால் கோபம்தான் வருகிறது.

    Reply : 0       0

    xlntgson Tuesday, 16 November 2010 08:55 PM

    திருமுகம்? அதிகமான பக்தி படங்கள் எடுத்தாரே அவரா, எம்ஜியார் படங்களும் கூட செய்தாரே அவரா?
    சொல்வதை சொல்லட்டுமே சொல்லிவிட்டுப் போகட்டுமே, எல்லாரும் தான் சொல்கிறார்கள் உண்மையும் பொய்யும்.
    தீர்ப்பு உடனே வந்துவிடுமா என்ன?
    தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .