2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விசர்நாய்க்கடி நோய் ஒழியும் நிலை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

இலங்கையிலிருந்து விசர்நாய்க்கடி நோய் முற்றாக ஒழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இந்நோய் காரணமான இறப்புக்கள் எவையும் எப்பாகத்திலிருந்தும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக தெரு நாய்கள், பூனைகள் மற்றும் எலிகளின் பெருக்கம் தடைப்பட்டுள்ளது.

இதே உத்வேகத்தை பொதுமக்களும் அரசாங்கமும் தனியார் துறையும் தொடர்வார்களேயானால் விசர்நாய்க்கடி நோய் மாத்திரமன்றி டெங்கு, யானைக்கால், நெருப்புக்காய்ச்சல், எனும் பல வகையான தொற்று நோய்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விசர்நாய்க்கடி நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் டாக்டர்.பி.எல்.ஹரிஸ்சந்திரா இது தொடர்பில் கூறுகையில், 6,93,000 ஆண் நாய்களுக்கும் 53,000 பெண் நாய்களுக்கும் இவ்வருடம் இனப்பெருக்க தடுப்பு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கான செலவு 350 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு 58 பேரும் இவ்வருடம் இதுவரையில் 36பேரும் விசர்நாய்க்கடி நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .