2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நோபல் சமாதான பரிசளிப்பு வைபவத்தை இலங்கை புறக்கணிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில் அரச எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியதால் சிறையிலடைக்கப்பட்டுள்ள லியூ ஸியாபோவுக்கு இவ்வருடம் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்படவுள்ளது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீனாவுக்கு ஆதரவளிக்கும் முகமாக இவ்வைபவத்தில் இலங்கை பங்குபற்றாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக   இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவும் ஏனைய 18 நாடுகளும் நோர்வேயில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் பங்குபற்றுவதில்லை எனத் தீர்மானித்துள்ளன.

நோர்வேயில் தூதரகங்களைக் கொண்டுள்ள 58 நாடுகள் இவ்வைபவத்தில் பங்குபற்றுமாறு அழைக்கப்பட்டுள்ளன.

எனினும் ரஷ்யா, உக்ரைன், சவூதி அரேபியா, சூடான், வெனிசூலா, கியூபா, கொலம்பியா, துனுஷியா, ஈராக், ஈரான், வியட்னாம், ஆப்கானிஸ்தான், கஸகஸ்தான், சேர்பியா, பாகிஸ்தான், எகிப்து, மொராக்கோ, பிலிப்பைன்ஸ் ஆகியன சீனாவுக்கு ஆதரவளிக்கும் முகமாக இதில் பங்குபற்றுவதில்லை எனத் தீர்மானித்துள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .