2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'போர்க் குற்றங்கள் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தத் தவறுகின்றமை சர்வதேச விசாரணைக்கான அவசியத்தை வெள

Super User   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அதிகளவு ஆதாரங்கள் வரும் நிலையில், போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தத் தவறுகின்றமை சுயாதீன, சர்வதேச விசாரணையொன்றுக்கான அவசியத்தை வெளிப்படுத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின், ஆசிய பணிப்பாளர் பிரையன் அடம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளதாக மேற்படி அமைப்பின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 அலைவரிசையினால் நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வீடியோ தொடர்பாக இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஆதாரங்கள், 18.05.2009 ஆம் திகதி யுத்தத்தின் கடைசி மணித்தியாலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கைதிகளின் கூட்டுப்படுகொலைகளுடன் இலங்கை இராணுவத்தை தொடர்புபடுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேற்படி வீடியோவில் காணப்படும் சடலங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின்  செய்தியாளரான 27 வயதான இசைப்பிரியாவினுடையது என்பதை குடும்ப அங்கத்தவர்கள் உட்பட பல தகவல் மூலங்கள் ஊடக மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 18.05.2009 ஆம் திகதி 53 ஆவது படையணியினால் கடைசி யுத்ததத்தில் கொல்லப்பட்ட எல்.ரி.ரி.ஈ. தலைவர்களில் பட்டியலில் எல்.ரி.ரி.ஈ. தகவல்தொடர்பு/ பிரச்சாரப் பிரிவைச் சேர்ந்த லெப். கேணல் இசைப்பிரியாவும் அடங்கியிருந்தாகவும் 21.06.2009 பாதுகாப்பு அமைச்சின் இணைத் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சனல் 4 அலைவரிசையினால் வெளியிடப்பட்ட வீடியோவானது உண்மையானது அல்லவெனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Friday, 10 December 2010 04:35 AM

    ஏயப்பவர்க்குக் காலம் என்று எண்ணி விடாதே பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் ......மறந்து விடாதே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .