2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசியல் தீர்வுக்காக த.தே.கூ-தமிழ் கட்சிகளின் அரங்கம் ஒன்றிணைந்து செயற்படுவது என தீர்மானம்

Super User   / 2010 டிசெம்பர் 11 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

தமிழ் மக்களுக்கு காத்திரமான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளின் அரங்கமும் ஒன்றிணைந்து செயற்படுவது என இன்று சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான நீண்ட கால அரசியல் தீர்வு மற்றும் அவர்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

 

இன்றை சந்திப்பின் போது தமிழ் மக்களுக்கான நீண்ட கால அரசியல் தீர்வு தொடர்பில் பொதுவான தீர்வுத்திட்டமொன்றை முன்வைப்பது என இரு தரப்பினருக்குமிடையில் இணக்கம் காணப்பட்டதாகவும் கலாநிதி குமரகுருபரன் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான  பொது தீர்வுத்திட்டமொன்றை தயாரிப்பதற்காக ஆறு பேர் கொண்ட உப குழுவொன்று அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக கலாநிதி குமரகுருபரன் கூறினார்.

எனினும் அக்குழுவுக்கான உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை என கலாநிதி குமரகுருபரன் மேலும் குறிப்பிட்டார்.

இரு தரப்பினருக்குமிடையிலான இன்றைய பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன், பி.அரியநேந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வினோ யோகலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் பொன் செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் சார்பாக அமைச்சர் டக்லஸ் தேவானந்த, முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த சங்கரி, டி.சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன், சந்திரஹாசன், ஸ்ரீதரன் மற்றும் உதயராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்திய சென்றுள்ளதனால் தமிழ் கட்சிகளின் அரங்கத்துடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Monday, 13 December 2010 06:36 PM

    உடைத்துக் கொண்டு போவதற்கு காரணங்களை இனிமேலும் தேடிக் கொண்டிராமல் இணைந்திருப்பதற்கான தேவைகளை உணர்ந்து ஒன்றாகச் செயல்படுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .