2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கை புலனாய்வாளர்களுக்கு பயிற்சியளிக்க பாகிஸ்தான் தயார்

Super User   / 2011 ஜனவரி 10 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை பொலிஸாருக்கும் புலனாய்வாளர்களுக்கும் பாகிஸ்தான்  பயிற்சி வழங்க முடியும் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிவ் அலி சர்தாரி இன்று கூறியுள்ளார்.

 பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற தூதுக் குழுவினரை சந்திந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரத்தினக்கல் வெட்டும் நிபுணர்களை இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாறிக் கொள்வது உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும் எனவும் பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தேயிலையை பாகிஸ்தானுக்கு மேலும் அதிகமாக ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக்கூறிய அவர், இருதரப்புக்கும் இடையிலான வர்த்தகம் உள்நாட்டு நாணயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறினார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உரையாற்றுகையில் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இலங்கை முழுமையாக ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

பயங்கரவாததிற்கு எதிராக போரிடுவதில் இலங்கை இராணுவத்திற்கு உதவியமைக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அவர்  நன்றி தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்த முதலாவது நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் பெறுமதி 400 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதை 2 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு  இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .