2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதியை சந்திக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

தனியார் பஸ் உரிமையாளர்கள் அடுத்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து தமது பிரச்சினையைப் பற்றி பேசவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இன்று சேவை நிறுத்தத்தில் ஈடுபடவிருந்த தனியார் பஸ் உரிமையாளர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமது தீர்மானத்தை மீளப் பெற்றுக்கொண்டனர்.

ஜனாதிபதியுடன் பேசியபின் பஸ் கட்டணங்களை அதிகரிக்கக் கூடியதாக இருக்குமென தாம் நம்புவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது நேர அட்டவணை, பஸ் கட்டணம் உட்பட எமது சகல பிரச்சினைகளையும் பேசமுடியுமென நம்பிக்கை கொண்டுள்ளோம் என விஜயரட்ன கூறினார்.

இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்கள், சேவை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்னரே நாம் நிலைமை எதிர்க்கொள்ளத் தயாராக இருந்தோம் என்று போக்குவரத்து அமைச்சர் வெல்கம தெரிவித்தார்.
 
மேல் மாகாணத்துக்கு வெளியிலிருந்து 175 பஸ்களை கொண்டுவந்திருந்தோம். இதைவிட 40 விசேட புகையிரத சேவைகளையும் நாம் ஒழுங்குபடுத்தியிருந்தோம்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் இனி சேவை நிறுத்தம் என பயமுறுத்துவார்களாயின் அந்த சவாலை எதிர்க்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .