2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிவாரண நடவடிக்கையில் இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளையும் இணைந்து கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற எதிர்கட்சிகள் கொழும்பிலிருந்து கொண்டு வெள்ள அனர்த்தம் தொடர்பாக பொய்யான தகவல்ளை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"எமது அரசாங்கம் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக நின்று செயற்படுகின்றது. எதிர்க்கட்சிகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடாமல் கொழும்பிலிருந்து கொண்டு பொய்யான அறிக்கைகளை விடுகின்றனர்" என அவர் கூறினார்.

"நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், நான் மட்டக்களப்புக்கு சென்ற போது சொகுசு ஹோட்டலில் தங்கியதாக கூறியுள்ளார். 

மட்டக்களப்பிலுள்ள அனைத்து ஹோட்டல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் நான் எவ்வாறு சொகுசு ஹேட்டலில் தங்க முடியும்?" என அவர் கேள்வி எழுப்பினார். Pix by :- Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .