2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து போட்டி

Super User   / 2011 ஜனவரி 17 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் தனித்தும் வேறு சில இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தும் போட்டியிடுவது என இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சியின் அதியுயர் பீட மற்றும் அரசியல் பீட கூட்டத்தில் தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கும் இடையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு கிழக்கிற்கு வெளியில் அக்குறணை பிரதேச சபை தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது எனவும் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமின் தொகுதியான அக்குறணை பிரதேச சபையில் தனித்து போட்டியிடுவது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கூறினார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணத்தில் எந்தெந்த பிரதேசங்களில் தனித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது என நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • oork kuruvi Tuesday, 18 January 2011 05:22 PM

    புத்தளத்தில் தனியே போட்டியிட்டு எல்லாவற்றையும் அள்ளப் போகிறோம் என்று ஒரு கூட்டம் ஊளையிட்டு திரிகிறது. இவர்கள் காங்கிரசின் எந்தப் பிரிவு?

    Reply : 0       0

    ameer Tuesday, 18 January 2011 10:00 PM

    ஹரீஸ் தனித்து நின்று கல்முனை இல் வின் பண்ணமுடியுமா.
    அறிக்கை விடுவதுடன் சரி..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X