2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொதுநலன் ஈடுபாடு;இலங்கை முன்னிலை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 19 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனிநபர் ஒருவர் தனது நேரத்தையும் சிரமத்தையும் தாமாக முன்வந்து உதவும் பண்பினைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 8ஆவது இடத்தைப் பெற்று முன்னிலை வகித்துள்ளது.

 

சுமார் 130 நாடுகளில் நடத்தப்பட்ட பொதுநலன் ஈடுபாடு பற்றிய கணக்கெடுப்பின் போதே இலங்கை இந்த இடத்தைப் பெற்றுள்ளது என அமெரிக்காவை தளமாகக் கொண்ட கம்பனி ஒன்று தெரிவித்துள்ளது.

2009, 2010 ஆம் ஆண்டுகளில் 'கலப்' நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்வில் இந்தியா 48ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் பாகிஸ்தான் 27ஆவது இடத்திலும் நேபாளம் 40ஆவது இடத்திலும் உள்ளது.

60 புள்ளிகளைப் பெற்றுள்ள அமெரிக்கா முதலாவது இடத்தில் உள்ள நிலையில் அயர்லாந்தும் அதே புள்ளிகளைப் பெற்று முன்னிவை வகித்துள்ளது. அத்துடன் அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்த ஆய்வின் போது கேட்கப்பட்ட கேள்விகளின் பிரகாரமே மேற்படி இடங்கள் குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், 'நீங்கள் கடந்த மாதம் நன்கொடை வழங்கினீர்களா?, ஒரு பொதுநல நிறுவனத்துக்கு உதவ உங்கள் நேரத்தை செலவிட்டீர்களா? மற்றும் முன்பின் தெரியாத ஒருவருக்கு உதவி செய்வீர்களா? போன்ற கேள்விகளே இதன்போது கேட்கப்பட்டுள்ளன.

மேற்படி ஆய்வின் போது பொதுநல நிறுவனத்துக்கு உதவ தமது நேரத்தை செலவிட்டதாக கூறியவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டதாக ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .