2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொன்சேகாவால் ஏற்பட்ட நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்தை நிரப்ப கோரிக்கை

Super User   / 2011 ஜனவரி 22 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பின் சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி சத்திய பிரமாணம் செய்ய மறுத்ததையடுத்து நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்தை நிரப்ப ஒருவரை நியமிக்கும் படி நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக கித்துல்கொட தேர்தல் ஆணையாளரை எழுத்து மூலம் கோரியுள்ளார்.

ஏற்கனவே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பொன்சேகாவுக்கு அடுத்ததாகவிருந்த லக்ஷ்மன் நிபுணாராச்சியின் பெயரை தேர்தல் ஆணையாளர் முன்மொழிந்தார்.

சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஆணையாளரால் முன்மொழியப்பட்டவர் சபாநாயகர் முன்னிலையில் மூன்று மாதத்திற்குள் சத்திய பிரமானம் செய்ய வேண்டும்.

எவ்வாறாயினும் கடந்த ஜனவரி 14ஆம் திகதியுடன் மூன்று மாதம் கடந்துவிட்ட நிலையில் நாடாளுமன்ற ஆசனத்திற்கு வெற்றிடம் உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நிபுணாராச்சிக்கு அடுத்ததாக ஜயந்த கேட்டகொட உள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .