2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Super User   / 2011 ஜனவரி 23 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக மீனவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு இலங்கை கடற் படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு இந்திய மார்க்சிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையிலேயே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நேற்று சனிக்கிழமை வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அபகரித்துக் கொண்டனர்.

இதன்போது இரண்டு மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர். எனினும் ஜெயகுமார் என்ற மீனவர் நீந்தத் தெரியாததால் படகில் இருந்தார்.

அவரை வலுக்கட்டாயமாக இலங்கை படையினர் கடலுக்குள் தள்ளியுள்ளனர். இதனால் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இலங்கை கடற்படையினரின் இந்த கொடூரமான தாக்குதலை மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர் இலங்கை படையினர் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணம் கடல் அருகே சுட்டதில் பாண்டியன் என்ற இளைஞர் இறந்துள்ளார்.   

இத்தகைய சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும்  அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்திட உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்களது மீன்பிடி உரிமையை  பாதுகாத்து அவர்களின் அச்சத்தை போக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .