2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பான்கிமூனுடன் சந்திப்பு இடம்பெறவில்லை: அரசாங்கம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் நியூயோர்க்கில் வைத்து ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் நாயகம் பான்கீமுனை சந்தித்ததாக வெளியாகிய செய்திகளை அரசாங்கம் இன்று நிராகரித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும் தனக்கு தெரிந்த வகையில் சட்டமா அதிபருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளருக்குமிடையில் எந்தவித சந்திப்பும் ஏற்பாடுசெய்யப்படவில்லை எனவும் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவோடு ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர் குழு தொடர்பு கொள்வதை அரசாங்கம் தடுத்ததாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்தார்.

ஐக்கிய நாடுகள் பொது செயலாளரின் அலுவலகத்தோடு தொடர்புகொள்ள நாங்கள் முயற்சிக்கின்றோம். நல்லிணக்க ஆணைக்குழுவோடு தொடர்புகொள்ள விருப்பமென்றால் நேரடியாகவோ அல்லது அரசினூடாகவே தொடர்பு கொள்ள முடியும் என நியோமல் பெரேரா மேலும் தெரிவித்தார். (Dianne Silva)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X