2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிகரட், பீடி நுகர்வில் வீழ்ச்சி

Super User   / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

கடந்த சில வருடங்களில் சிகரட், பீடி உற்பத்தி, இறக்குமதி, பாவனை என்பன குறிப்பிடத்தக்களவு குறைந்தள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு 4935 மில்லியன் சிகரட்டுகளும் 3000 மில்லியன் பீடியும் நுகரப்பட்டதாகவும் 2006 ஆம் ஆண்டு 4623 மில்லியன் சிகரட்டுகளும் 2538 மில்லியன் பீடியும் நுகரப்பட்டதாகவும் அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2009 ஆம் ஆண்டு 4200 மில்லியன் சிகரட்டுகளும் 2279 மில்லியன் பீடியும் நுகரப்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டில் 5002 மில்லியனாக இருந்த உள்ளூர் சிகரட் உற்பத்தி 20009 ஆம் ஆண்டு 4101 மில்லியனாக குறைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு 3000 மில்லியனாக இருந்த பீடி உற்பத்தி 2009 அம் ஆண்டு 2279 மில்லியனாக குறைந்துள்ளது.

அரசாங்கம் 2004 ஆம் ஆண்டு 150, 285 மில்லியன் கிலோகிராம் சிகரட்டுகளை இறக்குமதி செய்திருந்தது. 2009 ஆம் ஆண்டு சிகரட் இறக்குமதி 36, 509 மில்லியனாக குறைந்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .