2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் அரங்கத்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு விசேடமான போக்குவரத்து நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார்.

இந்த புதிய போக்குவரத்து நடைமுறையானது நாளை வெள்ளிக்கிழமை மு.ப. 11 மணியிலிருந்து, கிரிக்கெட்போட்டி முடிந்தபின்னும்; ஒரு மணித்தியாலம் வரை அமுலில் இருக்கும்.

50 ரூபா, 100 ரூபா அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மாளிகாவத்தை சந்தி, இங்கிரம் சந்தி, ஆகியவை ஊடாக சோதனை சாவடிகளுக்கு வரவேண்டும். சோதனை சாவடிகளில் பொலிஸாரும் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றும் கடமையாற்றுவர் என கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கூறினார்.

250ரூபா,  500 ரூபா அனுமதி சீட்டு பெற்றுள்ளவர்கள் போதிராஜ மாவத்தையில் அமைந்த சோதனை சாவடிகளுடாக செல்லவேண்டும். வாகனத்தில் பயணிக்கும்; சகலரிடமும் அனுமதிசீட்டு இருந்தால் மட்டுமே வாகளம் அனுமதிக்கப்படும்.

ஐ.சி.சி., எஸ்.எல்.சி. உத்தியோகத்தர்களும் 5,000 ரூபா அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களும் வின்சன்ற பெரேரா வீதியூடாக அனுமதிக்கப்படுவர். மோட்டார் சைக்கிள்களை அநேகமாக சதோச களஞ்சிய, எம்.சி.கார் தரிப்பிடங்களில் நிறுத்த வேண்டியிருக்கும்.

அதிமுக்கியஸ்தர்களும், கிரிக்கட்சபை உத்தியோகத்தர்களும், 5000 ரூபாவுக்கு மேல் விலையுள்ள அனுமதி சீட்டை வைத்திருபோரும் கெத்தாராம கார் நிறுத்துமிடத்திலும், கலீல் விளையாட்டு திடலிலும், ரெம்பிள்கர் நிறுத்துமிடத்திலும் வாகனங்களை  நிறுத்த வேண்டும். இதைவிட இன்னும்பல இடங்களிலும் கார் நிரத்துமிடங்கள் அமையும். Pix By:- Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .