2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மோதலுக்கு பின்னரான நிலைமை குறித்து இலங்கை – ஐ.நா.வுக்கு இடையே பேச்சு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உயர்மட்டக் குழுவொன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் அதன்போது இலங்கையில் யுத்தத்துக்குப் பின்னரான மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக ஐ.நா. அறிவித்துள்ளது,

இந்த உயர்மட்டக் குழுவில் சட்டமா அதிபர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோரும் இருந்ததாக ஐ.நா.வின் பேச்சாளரான மாட்டின் நெசெகி, நியூயோர்க்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு போகாமலேயே இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு, பொறுப்புக் கூறும் விடயம் தொடர்பில் தனக்கு தேவையான சகல விவரங்களையும் சேகரித்துக் கொள்ளும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அவரது தலைமையதிகாரி விஜய நம்பியார் ஆகியோர் சட்டமா அதிபர் மோகன் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, ஐ.நா.வுக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரை நேற்று புதன்கிழமை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .