2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை தாமதம்

Super User   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

இந்த வாரம் ஆரம்பிக்கப்படவிருந்த கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை இரு முடிவுகளிலும் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

இந்த கப்பல் சேவைக்காக ஆரம்பத்தில் ஒரேயொரு இந்திய கப்பலே பயன்படுத்தப்படும். இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தினால் இதுவரை கப்பலொன்றை வழங்க முடியவில்லை.

இந்த கப்பல் சேவை வாரத்தில் இரண்டு தடவை நடைபெறும். கேள்வி அதிகரிக்கும் பட்சத்தில் குறித்த சேவை அதிகரிக்கப்படும் என இலங்கை கப்பல் கூட்டுத்தாபன தலைவர் ஏ.டி.கே சந்திரசேன தெரிவித்தார்.

இந்திய கப்பலில் ஒரே தடவையில் 1,000 பிரயாணிகள் செல்ல முடியும். இந்நிலையில் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் 600 பேர் செல்லக்கூடிய கப்பலொன்றையே எதிர்பாக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

குறித்த கப்பலில் ஒரு பிரயாணி 100 கிலோ கிராம் பொருட்கள் கொண்டு செல்ல முடியும். இப்பயணத்திற்கான கட்டணம் இதுவரை தீhமானிக்கப்படவில்லை. எனினும் விமான கட்டணத்தை விட அது குறைவாக இருக்கும் என சந்திரசேன மேலும் தெரிவித்தார்.

280 மைல் தூரத்தை கொண்ட இந்த கப்பல் பயணத்தை நிறைவு செய்ய 10 மணித்தியாலம் முதல் 12 மணித்தியாலம் வரை தேவைப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X