2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

லிபிய மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 01 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

லிபிய மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை  கண்டித்து கொழும்பிலுள்ள லிபிய தூதரகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

லிபியாவில் இடம்பெற்று வரும் சர்வதிகார ஆட்சிக்கு  எதிராகவும் லிபிய தலைவர்  முவம்மர் கடாபி தனது பதவியை இராஜினமாச் செய்ய வேண்டுமென்றும்  வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

லிபியாவில் ஜனநாயக சூழ்நிலை உருவாக வேண்டுமென்று இதன்போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதன்போது இடதுசாரி முன்னணியின் தலைவர்  கருணாரட்ன விக்கிரமபாகு, ஐ.தே.க.வின் மேல்மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால்; லக்திலக ஆகியோர் மகஜரொன்றைக் கையளிப்பதற்காக சென்றபோது அதனைப் பொறுப்பேற்பதற்காக லிபியத் தூதரகத்திலிருந்து எவரும் வரவில்லை. இந்நிலையில் குறித்த மகஜர் லிபிய தூதரக பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

லிபிய தலைவரின்  அராஜகத்திற்கு எதிராக லிபிய மக்களுடன் இணைந்து செயற்படுமாறு அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தான் உட்பட இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, மேல்மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக  ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார். Pix By :- Samantha Perera


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .