2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒற்றைத் தாய்மார்களுக்கு அரசாங்கம் நிதியுதவி

Super User   / 2011 மார்ச் 25 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

ஒற்றைத் தாய்மார்களை மாத்திரம் கொண்டு நடத்தப்படும் 84,390 குடும்பங்களுக்கு திவி நெகும திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் நிதியுதவி வழங்கப்படும் என சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மரக்கறி உற்பத்தி, விலங்கு வளர்ப்பு, மீன்பிடி மற்றும் சுயதொழில்களில் ஈடுபட்டுள்ள ஒற்றைத் தாய்மார்களுக்கு கடன் உதவிகள், உரங்கள், மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்படும் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

'அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம், வடக்கு கிழக்கில் அதிக எண்ணிக்கையான குடும்பங்கள் ஒற்றைத் தாய்மார்களினால் நடத்தப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒற்றைத் தாய்மார்களை கொண்ட குடும்பங்களின்  எண்ணிக்கையை இதுவரை கண்டறிய முடியவில்லை' என அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .