2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் அழைப்புக்கு நியூஸிலாந்து பிரதமர் மறுப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியை பார்வையிட வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ மறுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தென்னாபிரிக்காவை 49 ஓட்டங்களால் தோற்கடித்த நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பை நியூஸிலாந்துப் பிரதமர் மறுத்துள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த மறுப்பிற்கான காரணம் எதனையும் அவர் வெளியிடவில்லை.

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியை பார்வையிட வருமாறு நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீக்கு ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  (DM)


You May Also Like

  Comments - 0

  • Thilak Monday, 28 March 2011 05:02 PM

    அவர் வரமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான்

    Reply : 0       0

    Saratha Monday, 28 March 2011 05:06 PM

    தனது நண்பர் கடாபியை அழைத்திருக்கலாம்.

    Reply : 0       0

    jaliyath Monday, 28 March 2011 06:16 PM

    அவர் வராவிட்டால் போட்டி நடக்காத என்ன ?

    Reply : 0       0

    752524132 Monday, 28 March 2011 08:28 PM

    மானம் போயிரும் என்ற பயம்.

    Reply : 0       0

    F.Getroot Tuesday, 29 March 2011 02:14 PM

    பயம்தான் வேறென்ன. கடல் கடந்து வந்து மானத்த கப்பல்ல எற்றக்கூடாதுன்னு தான்

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms Tuesday, 29 March 2011 09:24 PM

    அழைப்பது நாகரிகம், காரணம் கூறாமல் நிராகரிப்பது அநாகரிகம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .