2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரிதொரு நாட்டின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகளை இலங்கை அரசாங்கம் எதிர்க்கும்

Menaka Mookandi   / 2011 மார்ச் 31 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடொன்றின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த மற்றுமொரு நாடு முயற்சிக்குமாயின் அதற்கு எதிராக இலங்கை அரசாங்கம் குரல் எழுப்பும் என்று அரசாங்க பேச்சாளரும்  ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

லிபிய மக்களைப் பாதுகாப்பதற்காகவே கூட்டுப் படைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அனுமதி வழங்கியது. இருப்பினும் மேற்படி கூட்டுப் படைகள் அந்த அனுமதிக்கும் அப்பால் சென்று தங்களது நாடுகளின் தனிப்பட்ட கோபங்களைத் தீர்த்துக்கொள்வதற்காக சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டுள்ளன.
 
இவ்வாறாக பொதுமக்கள் மீது கூட்டுப் படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கும் அவற்றை இயக்கும் நாடுகளுக்கு தகுந்த பாடத்தினை பொதுமக்கள் எதிர்காலத்தில் வழங்குவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு, இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'சர்வதேச நாடுகள் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சர்வதேச பலம் வாய்ந்த நாடுகளே மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள நாடுகளின் இராணுவங்களுக்கான ஆயுதக் கொள்வனவுக்கான நிதி உதவிகளையும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன' என்றும் சுட்டிக்காட்டினார். (M.M)


You May Also Like

  Comments - 0

  • unmai Thursday, 31 March 2011 08:11 PM

    உண்மையான கருத்து

    Reply : 0       0

    xlntgson Thursday, 31 March 2011 09:00 PM

    R2P என்னும் அத்துமீறி நுழையும் அதிகாரத்தை மிக எளிதாக ஐ நா பாதுகாப்புசபை பயன்படுத்தும் போது ஐ நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இல்லாத நாடுகள் எல்லாம் இறைமை இல்லாத நாடுகளே! பஹ்ரைன் நாட்டுக்குள் சவுதி படைகள் நுழைந்த பொழுது யாரும் ஒன்றும் சொன்னதாக தெரியவில்லை. குவைத்தில் ஈராக் படைகள் நுழைந்த பொழுது என்னே ஆர்ப்பாட்டம்! இதெல்லாம் எதை காட்டுகிறது ஆட்டத்தை மாற்றி மாற்றி ஆடலாம் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சட்டமாக எல்லாம் G7க்குள் இருந்தால் சரி என்று. பூட்டான் நேபாளம் போன்ற நாடுகள் இந்தியாவின் R2P நாடுகளா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .