2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'சார்க்போல்' எனும் தெற்காசிய பொலிஸ் அமைப்பு குறித்து ஆராய்வு

Super User   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் நாடு கடந்த குற்றச்செயல்களை முறியடிப்பதில் தெற்காசிய பிராந்தியத்திலுள்ள சட்ட அமுலாக்கல் அமைப்புகள் கூட்டிணைந்து செயற்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற தெற்காசிய பொலிஸ் தலைவர்களின் மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

சார்க்போல் என்ற பெயரில் தெற்காசிய பிராந்திய பொலிஸ் அமைப்பொன்றை அமைப்பது குறித்து கலந்துரையாடப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த முக்கிய விவகாரங்கள் முறையாக முறியடிக்கப்பட்டால் மக்கள் அரசியல் சுதந்திரம், சமூக உணர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தியை உணர்வார்கள் என அவர் கூறினார்.

பயங்கரவாதத்தை முறியடிப்பதன் தந்திரோபாய முகாமைத்துவம் குறித்த சர்வதேச  பயிற்சி நெறியொன்று  நீர்கொழும்பிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில்  நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X