2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மேர்வின் சில்வா கோபமடைய தேவையில்லை: அமைச்சர் ராஜித

Super User   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

பேலியகொடையில் புதிதாக அமைக்கப்பட்ட மீன்சந்தையில் கப்பம் கோரப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா கோபமடைந்து, இவ்விவகாரத்தில் தான் சம்பந்தப்படவில்லையென கூறத்தேவையில்லை. ஏனெனில் அவர் அதில் சம்பந்தப்பட்டதாக எவரும் கூறவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின்போது கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தை திறக்கப்பட்டு இரு நாட்களில் கப்பம் கோரும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அவர்கள் வியாபாரிகள், பாரம் தூக்குபவர்கள், உதவியாளர்கள் அனைவரிடமும் கப்பம் அறவிட்டார்கள். கழிவறையை பயன்படுத்துவதற்கும் கப்பம் கோரப்பட்டது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0

  • ABDUL RAHEEM. Monday, 11 April 2011 01:11 AM

    ராஜித உங்களுக்கு மேர்வின் பற்றி தெரியாது கவனம்!

    Reply : 0       0

    jaliyath Monday, 11 April 2011 06:33 PM

    ரொம்ப கவனமாக டீல் பண்ணுங்க மினிஸ்டர் அவர்களே

    Reply : 0       0

    sab Monday, 11 April 2011 08:10 PM

    இப்படி பயந்தால் நம் நாடு நல்லா உருப்படும். போங்க சார் நாங்க ஆதரவு தாரம்.

    Reply : 0       0

    siraj mohamed Monday, 11 April 2011 09:38 PM

    கள்ளன் இப்ப புடிபடட்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .