2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் புரூனை நாட்டுத் தூதுவர் சந்திப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 09 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கும் இலங்கை, இந்தியா, நேபால் நாட்டுக்கான புரூனை நாட்டுத் தூதுவர் டாக்டர். டாட்டோ பதுக்கா சித்தீக் அலிக்கு இடையிலான சந்திப்பொன்று  நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரதியமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை வந்துள்ள தூதுவர், புரூனை நாட்டினுடைய உதவியை கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவது தொடர்பில்  கலந்துரையாடினர்.

குறிப்பாக விதவைகள், அநாதைகள், மகளிர் அபிவிருத்தி, சிறுவர் அபிவிருத்தி, வீடில்லாப் பிரச்சினை போன்றவற்றைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஏனைய பல்வேறுபட்ட உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

புரூனை நாட்டு தூதுவர் அந்த நாட்டின் அரசாங்கத்தின் சார்பில் கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்திக்கு எதிர்காலத்தில் உதவியளிப்பதாக வாக்குறுதியளித்ததுடன், மேலும் பல கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
 
புரூனை நாட்டு தூதுவர் பிரதியமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கியதுடன்,  புரூனை நாட்டு தூதுக்குழுவினருக்கு நாடாளுமன்றத்தில் பிரதியமைச்சர் விருந்துபசாரமளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .