2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜோர்தான் தொழிற்சாலையில் மீண்டும் மீண்டும் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் இலங்கைப் பெண்கள்

Super User   / 2011 ஜூன் 10 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜோர்தானிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் இலங்கைப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாகவும் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்படுவதாகவும்  உலக தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான நிறுவகம் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்படடுள்ளது.

'கிளஸிக் பெக்டரி' என அழைக்கப்படும் மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் உலகப் புகழ்பெற்ற ஆடை விற்பனை நிலையங்களுக்கு ஆடை தயாரிப்பதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளளது.

கிளஸிக்கின் முகாமையாளர்களின் பாலியல் வேட்கைகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் பெண்கள் தாக்கப்படுவதாகவும் நாடுகடத்தப்படுவதாகவும் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இளம் பெண் ஒருவரை மேற்கோள் காட்டி அமெரிக்காவை தளமாகக் கொண்ட அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

"தொடர் வல்லுறவுகளில் ஈடுபடும் இலங்கையரான  நபர், வாராந்த விடுமுறை நாட்களில்  வான் ஒன்றை அனுப்பி நான்கு அல்லது ஐந்து பெண்களை தனது ஹோட்டலுக்கு அழைத்து அவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிறார்.

வல்லுறவுக்குள்ளாக்கப்படும் இளம் இலங்கைப் பெண்களின் வாழ்க்கை முற்றாக நாசமாகியுள்ளது. ஏனெனில் அவர்களின் கலாசாரத்தில் கன்னித்தன்மை மிக மதிப்பானதாகும் என்பதுடன் திருமணத்திற்கு முன்னர்  மிக முக்கியமானதுமாகும்"என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வல்லுறவு புரியும் மேற்படி நபரை விலகக்கக் கோரி 2010 ஒக்டோபர் மாதம் சுமார் 2400 இலங்கை மற்றும் இந்திய ஊழியர்கள் பகிஷ்கரிப்பு செய்தனர்.  கிளஸிக் உரிமையாளர் அம்முகாமையாளரை அங்கிருந்து அகற்றினார். ஆனால் ஒரு மாதத்தின்பின் அம்முகாமையாளர் திரும்பி வந்தார்' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் விபரங்களையும் உலகத் தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.

"சாட்சிகளின் வாக்குமூலத்தின்படி, வேலை இலக்குகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் திட்டப்படுதல், தாக்கப்படுதல், சம்பளம் வெட்டப்படுதல் ஆகியவற்றுக்கு தொழிலாளர்கள் உள்ளாகின்றனர்.  பெண்களை விரைவாக வேலைசெய்விக்க வைப்பதற்காக முகாமையாளர்கள் பெண்களின் அங்கங்களை தடுவுவது போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். இங்குள்ள ஊழியர்கள் இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்" என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளஸிக் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் கூறுகையில்,  "இலங்கைப் பெண்களை  குறிப்பிட்ட ஒரு முகாமையாளர் பாலியல வல்லுறவுக்கு உட்படுத்துகிறார் என்பதை இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் சாட்சியமளிப்பார்கள். பாதுகாப்பான இடத்தில் வைத்து இந்த ஊழியர்கள் சாட்சியமளிப்பர்" என தெரிவித்துள்ளாதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

இணைப்பு: உலக தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான நிறுவகத்தின் முழுமையான அறிக்கை


You May Also Like

  Comments - 0

  • Saratha Friday, 10 June 2011 08:39 PM

    அங்கு இலங்கை தூதரகம் எதுவும் இல்லையா?

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Friday, 10 June 2011 08:58 PM

    தூதரகத்தை விடுங்கள், அந்த நாட்டு சட்டங்கள் கற்பழிப்புக்கு ஆதரவானவையா?
    விருப்ப உறவு என்று மாறிவிடும் வழக்கு வம்பு என்று போனால்! நமது பெண்கள் அந்தரமாக்கப்பட்டால் இது தான் நடக்கும் பெண்கள் தன்னை சூழ இருக்கும் குடும்ப வலயப் பாதுகாப்பிலிருந்து நீக்கப்படும்போது இவ்வாறான கஷ்டங்களை எதிர்நோக்குவர்! ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் இம்மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தி குழப்புவர்!
    ஆணைப் பெண்ணை பிரித்து வைக்கவும் முறைகேடான உறவுப் பழக்கங்கள் ஏற்படவும் வயது வித்தியாசம் கூறி மூத்தோரை தூரமாக்கவும் இவை காரணிகள்!

    Reply : 0       0

    Hot water Friday, 10 June 2011 09:25 PM

    இத்தகைய அயோக்கியர்களுக்கு மரண தண்டனை உடனடியாக வேண்டாம். எதை பயன்படுத்தி துஷ்பிரயோகம், வல்லுறவு செய்கிறார்களோ அதை நீக்கிவிடலாம்.

    Reply : 0       0

    ruthra Friday, 10 June 2011 09:47 PM

    ஒரு மிருகம் துணிந்து இத்தனைப் பெண்கைள வேட்டையாடி இருக்கின்றது? இதற்கு தீர்வே இல்லையா?

    Reply : 0       0

    menu Saturday, 11 June 2011 06:22 PM

    தீர்வு இருக்கு ருத்ரா. அந்த மிருகத்தால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் பெண்ணொருவரே அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இதே இணையத்தளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் விநோத உலகத்தில். வல்லுறவிலிருந்து தப்புவதற்காக ஒரு பெண் கையாண்ட யுத்தி அது. அவ்வாறானதொரு தண்டணை அந்த மிருகத்துக்கும் துணிந்து ஒரு பெண் வழங்கினால் இனியும் நடக்காது இவ்வாறான கொடுமைகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .