2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா தலையிடாது: இந்திய தூதுக்குழு

Super User   / 2011 ஜூன் 11 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது எனவும் அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் எனவும் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலேசாகர் சிவ் சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரடங்கிய இந்திய தூதுக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது வடக்கு இராணுவமயப்படுத்தப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்களிடம் சிவ்சங்கர் மேனன் கூறுகையில்,  இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வழங்குவதும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவமே உடனடி இலக்காகும் எனக்கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பாக விபரங்களை வெளியிடுவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீள்குடியேற்ற விடயத்தில் பணிகள் நடைபெறுகின்றபோதிலும் இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டியிருப்பதாக சிவ் சங்கர் மேனன் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான இரு மணித்தியால பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டதை இந்திய தூதுக்குழு தெரிவித்தது. இருதரப்புக்கும் சௌகரியமான வேளையில் இந்த விஜயம் இடம்பெறும் எனவும் இதற்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை குறித்து இரு நாடுகளின் மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்  இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய தீர்மானங்களை அவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் மேனன் தெரிவித்தார்.

எனினும், இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • ajan Sunday, 12 June 2011 06:16 PM

    வெட்கம், இந்தியா ஒரு காந்தி தேசம் ஒரு பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லி "கொல்லுவதுக்கு "

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Sunday, 12 June 2011 08:54 PM

    ajan தலையிட வேண்டும் என்கிறீர்களா, தலையிட்டால் உங்களுக்கு ஒரு தலைபட்சமாக தலையிடவேண்டும் என்ன? சிங்கள தேசப்பற்று தேசிய இயக்கமும் அவ்வாறே விரும்புகின்றனர். அவர்களது கோரிக்கைகளை எல்லாம் இந்தியா ஏற்று தமிழருக்காக பேசக்கூடாது என்று தமிழ் தேசிய இயக்கங்கள் அனைத்தும் இந்தியாவை எதற்காக குறை கூறுகின்றனரோ அதற்கு நேர் மாறாகவே சிங்கள மட்டும் இயக்கத்தினர். ஒன்று மட்டும் நிச்சயம் எல்லாரும் இந்தியாவை ஏசுகின்றனர் இந்தியா பழிவாங்கல் கொள்கையில் இல்லை என்பதால் இப்போது வெட்க வேண்டியது யார் வாய் திறவாதே என்று தாக்குவோர்.

    Reply : 0       0

    IBNU ABOO Monday, 13 June 2011 02:05 AM

    இந்திய தலைட்டதால்தானே இலங்கை புலிகளை தோற்கடித்தது. அப்படி என்றால் எல்லா விவகாரங்களிலும் இந்திய தலையீடு மறுக்கப்பட முடியாததே.

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Wednesday, 15 June 2011 09:34 PM

    ibnu aboo தலையீடு என்று சுலபமாக கூறுகின்றீர்களே, ஒரு நாட்டின் விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிட முடியுமா? இந்தியா செய்வதும் இதுகாறும் செய்து வந்திருப்பதும் தலை ஈடல்ல, பேச இயலாத நிலையில் முட்டுக்கட்டை ஆகும். போதெல்லாம் பேச்சைத் தொடங்க முடுக்கி விடுவது தான் உத்திரவிடவோ ஆணை இடவோ முடியும் என்றால் எப்போதோ செய்திருக்க வேண்டுமே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .