2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

விடைத்தாள்கள் திருத்துவதிலிருந்து விலக பல்கலை ஆசிரியர்கள் தீர்மானம்

Super User   / 2011 ஜூன் 12 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்னா பரணமான்ன)

2011 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை  விடைத்தாள்களை திருத்தும் பணியிலிருந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் விலகிக் கொள்வர் என்பதை பரீட்சைகள் ஆணையாளருக்கு இவ்வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் இன்று தெரிவித்துளது.

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதிலிருந்து விலகிக்கொள்ளும் உறுதியான தீர்மானத்தை சங்கத்தின் நிறைவேற்றுக்குழு, கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்டதாக  அச்சங்கத்தின் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.

"அரசாங்க அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், போதுமான சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பாக திருப்திகரமான எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதிலிருந்து விலகுவதன் மூலம் எமது தொழிற்சங்க நடவடிக்கையை வலிமையாக்கத்  தீர்மானித்தோம்"  என அவர் கூறினார்.

இது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்கவிடம் கேட்டபோது, பல்கலைக்கழக ஆசிரியர்கள் மேற்படி தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வர் என நம்புவதைத் தவிர எதுவும் கூறுவதற்கில்லை என பதிலளித்தார்.

"செப்டெம்பர் மாதம் இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் எனவும் அதனால் பல்கலைக்கழக ஆசிரியர் தமது தீர்மானத்தை மாற்றிக்கொண்டு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் பங்குபற்றுவர்"   என நம்புகிறோம்' என அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X