2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நுளம்புப் பெருக்கம்: ஸ்தலத்திலேயே அபராதம் விதிக்கப்படும்

Super User   / 2011 ஜூன் 13 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுளம்புப் பெருகும் இடங்கள் தொடர்பான எச்சரிக்கைகளை புறக்கணிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஸ்தலத்திலேயே அபராதம் விதிக்கும் அதிகாரம் சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

ஸ்தலத்திலேயே அபராதம் விதித்தல், தனியார் மற்றும் பொதுக்காணிகளில் நுழைந்து சோதனை மேற்கொள்ளல் ஆகிய அதிகாரங்களை வழங்கும் வகையில், நுளம்புப் பரவல் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக  சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுளம்புப் பெருகும் இடங்களை தூய்மையாக்குவதற்கு தற்போது வழங்கப்படும் இரு வார கால அவகாசத்தை ஒரு வாரகாலமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. (SAJ)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .