2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதி மஹிந்தவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

Super User   / 2011 ஜூன் 18 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(சுசித ஆர். பெர்னாண்டோ)

சித்திரவதையினால் பாதிக்கப்படுவோரை பாதுகாக்கும் அமெரிக்க சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  அமெரிக்க சமஷ்டி நீதிமன்றமொன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

இலங்கையில் 3 வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட சிலரின் உறவினர்களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்ட ஈடு கோரி அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கிலேயே ஹேக் உடன்படிக்கையின்கீழ்  மேற்படி நீதிமன்றம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதிக்கான அழைப்பாணை, இலங்கையின் நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஹேக் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் அமெரிக்காவும் இலங்கையும் அடங்குகின்றன.

மாணவர் ரஜிஹர் மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜா , ரி.தவராஜா ஆகியோரின் உறவினர்கள் இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

ரஜிஹர் மனோகரன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவராவார். ஆனந்தராஜா 2006 ஜூன் மாதம் மூதூரில் கொல்லப்பட்ட அக்ஷன் கொன்ட்ரோலா பெய்ம் நிறுவனத்தின் ஊழியர்கள் 17 பேரில் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது. ரி.தேவராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்த பதுங்குக் குழியொன்றில் வீழ்ந்த எறிகணையினால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நீதிக்குப் புறம்பான கொலைகளால் இவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.  இலங்கையின் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இவ்வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளனர்.

 ரஜிஹர் மனோகரனின்  தந்தை கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன்,  பிரேமாஸ் ஆனந்தராஜாவின் மனைவி கலைச்செல்வி லவன், மற்றும் ரி.தேவராஜா குடும்பத்தினரின் உறவினரான ஜெயகுமார் ஐயாதுரை ஆகியோர் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இனஅழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் அனுசரணையுடன் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் முன்னாள் உதவி பிரதி சட்டமா அதிபர் புரூஸ்பெய்ன் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி  இம்மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • ajan Saturday, 18 June 2011 05:52 PM

    நல்லவிடயம் தொடர்ந்து நடக்கட்டும்

    Reply : 0       0

    ruthrar Saturday, 18 June 2011 06:31 PM

    கடவுள் இருக்கின்றான்

    Reply : 0       0

    Nesan Saturday, 18 June 2011 07:11 PM

    அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடுத்தால்....

    Reply : 0       0

    xlntgson Saturday, 18 June 2011 09:12 PM

    தன்னைக் கைது செய்யலாம் என்ற அச்சத்தில் ஜோர்ஜ் புஷ் சுவிஸ் நாட்டுக்குப் போகாமல் தவிர்ந்து கொண்டார் என்று முன்பு செய்து வந்தது. சூடானின் பஷீர் சவூதிக்குச் சென்றார். இப்போது சீனாவிலும், அழைப்பை ஏற்று செல்லவிருக்கிறார். ஆகவே நமது ஜனாதிபதியும் போகாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. போவதென்றால் நமது பொருளாதாரம் நன்றாக இருக்க வேண்டுமே. இறந்த ஒவ்வொருவருக்கும் கோடிக் கணக்கில் கொடுக்க வேண்டும் என்றால் எங்கே போவது?
    மில்லியன் கணக்கில் மக்களைக் கொல்கின்றவர்கள் வசதியாக இருந்தும் கொடுக்கும் மனதிலா இருக்கின்றனர் - என்ன?

    Reply : 0       0

    Fahim Saturday, 18 June 2011 10:10 PM

    புஷ்ஷும் கிளிண்டனும் ஒபாமாவும் கொன்றவர்களுக்கு யார் பதிலளிப்பது?

    Reply : 0       0

    suddi Sunday, 19 June 2011 01:31 AM

    அமெரிக்கர்களுக்கு காமெடி பண்ணுவதே வேலையாய் போச்சுது.

    Reply : 0       0

    IBNU ABOO Sunday, 19 June 2011 03:33 AM

    பிரபாகரன் தன் இனத்தவர்களையும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளையும் அளித்ததற்கு எந்த வழக்கும் எங்கும் தாக்கல் செய்யப்படவில்லையே . முதலில் புஸ்ஸையும் , இஸ்ரேல் பிரதமரையும் கூட்டில் ஏற்றுங்கள்

    Reply : 0       0

    Hot water Sunday, 19 June 2011 04:02 AM

    இலங்கை ஜனாதிபதியொருக்கு வெளிநாட்டு நீதிமன்றமொன்றினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாக இருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .