2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.நாவுக்கு தாக்குதல் வான் கலங்கள்: பதிலுக்காக காத்திருக்கிறது விமானப்படை

Super User   / 2011 ஜூன் 18 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.நா. சமாதானப் படைகளுக்கு தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்களை வழங்க தான்  முன்வந்ததை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை விமானப்படை, இது குறித்து ஐ.நாவின் பதிலை எதிர்பார்த்து காத்துள்ளதாக நேற்று தெரிவித்தது.

'அதை செய்யமுடிந்தால் அது எமது நாட்டுக்கு மேலதிக வருமானத்தை வழங்குவதுடன் இவ்வான்கலங்களை செயற்பாட்டுநிலையில் வைத்திருப்பதற்கும் உதவும் என விமானப்படையின் குறூப் கப்டன் விஜேசூரிய கூறினார்.

உக்ரேனில் தயாரிக்கப்பட்ட எம்.ஐ 24 ஹெலிகொப்டர்கள் மற்றும் சீன தயாரிப்பான வை-12 விமானம் ஆகியவற்றை வழங்க விமானப்படை முன்வந்துள்ளதாக கூறிய அவர் இது 'எமது விமானிகளுக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும்' எனக் கூறியுள்ளார். (SJ)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .