2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தகவல் சுதந்திர சட்டமூலத்திற்கான ஐ.தே.க. பிரேரணை தோற்கடிப்பு

Super User   / 2011 ஜூன் 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு உரிமையளிக்கும் விதமான தகவல் உரிமை சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் ஐதேகவின் முயற்சி இன்று அரசாங்கதினால் தோற்கடிக்கப்பட்டது.

ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தனிநபர் பிரேரணையாக இதை சமர்ப்பிக்க விருந்தார். அரசாங்கத்தரப்பிலிருந்து இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கம் தகவல் அறிவதற்கான சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதால் இந்த தனிநபர் பிரேரணையை ஆதரிக்க முடியாது என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையையடுத்து தேவையானால் இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தலாம்  என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்தார்.

அவ்வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 97 வாக்குகளும் ஆதரவாக 34 வாக்குகளும் கிடைத்தன. இதனால் 63 மேலதிக வாக்குகளால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. ஐ.தே.க., ஜே.வி.பி., த.தே.கூ. ஆகியன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. (KB, YP)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .