2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க IUSF எதிர்ப்பு

Super User   / 2011 ஜூன் 21 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான உயர் கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளூர் மாணவர்களின் வாய்ப்புகளை குறைக்கும் என மேற்படி ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தற்போது 0.5 சதவீதமாகவுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு பல்கலைக்கழக மானியங்கள் ஒன்றியத்தின் சுற்றுநிருபத்தின்படி  5 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக அனைத்துப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்தார்.

'பல்கலைக்கழக மானியங்கள் ஒன்றியம் மேற்கொண்டுள்ள மாற்றங்களால் குறைந்தபட்சம் 1100 வெளிநாட்டு மாணவர்கள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படுவர். இது உள்ளூர் மாணவர்களுக்குப் பெரும் அநீதியாகும். ஏனெனில் உயர்தரப் பரீட்சையின் போட்டித் தன்மை காரணமாக 100,000 இற்கும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பை இழக்கின்றனர்' என சஞ்சீவ பண்டார கூறினார்.

இப்போது பல்கலைக்ககழகங்களில் 2000 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு வெற்றிடம் உள்ளது. அரசாங்கம் கூறுவது உண்மையானால் முதலில் இவ்வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ரஜரட்ட பல்கலைக்கழகம் (விவசாய பீடம் 170 வெற்றிடங்கள்), றுகுணு பல்கலைக்கழகம் (விஞ்ஞானபீடம் 12 வெற்றிடங்கள்) பேராதெனிய பல்கலைக்கழகம் (சுகதார விஞ்ஞான பீடம்-114 வெற்றிடங்கள்) இருப்பதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .