2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ரிஸானாவின் விடுதலைக்காக மீள்கோரிக்கை

Super User   / 2011 ஜூலை 16 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தோனேசிய நாட்டு பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீகிற்கான மன்னிப்பு தொடர்பிலான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் புதுப்பித்துள்ளன.

 தனது எஜமானை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்ட இந்தனேசிய பணிப்பெண்ணுக்கு பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மன்னிப்பு வழங்கியதையடுத்து கடந்து புதன்கிழமை ஜஹார்த்த திரும்பியுள்ளார்.

மேற்கு ஜாவா பிரதேசத்தை சேர்ந்த குறித்த பணிப்பெண் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற எஜமானை தனது சுய பாதுகாப்பிற்க்காக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2009 மே மாதம் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

எனினும் இவருக்கு மன்னிப்பு வழங்குவதற்காக இந்தனேசிய அரசாங்கம் நட்டஈடாக 534,884 அமெரிக்க டொலரை வழங்கியது.

தனிநபர் உரிமை என்பதனால் அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்க முடியாது. குறித்த குடும்பம் மாத்திரமே ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்க முடியும் அல்லது நல்லிணக்கத்தின் மூலம் நட்டஈட வழங்க முடியும்.

இந்நிலையில், இந்தனேசிய பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதை போன்று ரிஸானா நபீகிற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன. (Arab News)


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Sunday, 17 July 2011 05:54 AM

    நட்ட ஈடு கொடுக்க வேண்டிவந்தால் எமது நாட்டு அரசாங்கம் கேசை கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    Reply : 0       0

    risimb Sunday, 17 July 2011 09:53 AM

    ரிசானா உங்களுக்காக இறைவனை பிராத்திக்கிறேன். சம்பவம் எந்த சூழ்நிலையல் நடைபெற்றதோ!

    Reply : 0       0

    Anban Sunday, 17 July 2011 05:30 PM

    அனைத்துலக சமூகம் தம் கவனத்தை மேற்கண்ட விடயத்தில் செலுத்த வேண்டும். அதேபோல் சவுதிகளை உல்லாச பிரயாணிகளாகக் கூட மதியாது ஒதுக்க வேண்டும். அன்றில் இவ்வாறானோரின் கொட்டத்தை அடக்க முடியாது போகும்.

    Reply : 0       0

    xlntgson Sunday, 17 July 2011 08:51 PM

    ibnu aboo ஒத்தைபி என்பது அந்த பாதிக்கப்பட்ட பெற்றோரின் பெயர். தந்தை மன்னித்து விட்டதாகவும் தெரிகிறது தாய் பணம் பெற சம்மதிப்பாரா என்று தெரியாமல் இலங்கை அரசுக்கு $ஐந்து லக்ஷம் பெரிதென பொருள் படும் விதமாக பேசுவ்து- இலங்கை ஒரு பிச்சைக்கார நாடு என்பது போல்- நீங்கள் நக்கல் செய்வதாக தெரிகிறது!
    நான் அப்படி நினைக்கவில்லை, அதை தர எத்தனையோ பேர் தயாராகிவிடுவர்; அரசுக்கு கேவலமல்லவா!
    முதலில் நற்செய்தி வரட்டும் பார்ப்போம்!
    முந்தாதீர்கள், தயவு செய்து.

    Reply : 0       0

    akkarai Monday, 18 July 2011 02:15 AM

    @ anban, சும்மா வார்த்தைகளை விட வேண்டாம், எல்லா நாட்டிலும் எல்லா சமூகத்திலும் மனிதர்களும் உண்டு மிருகங்களும் உண்டு. அந்தச் சவுதிகளால் எத்தனை எத்தனை மனிதர்கள், குடும்பங்கள் நாடுகள் காலத்தை கடத்துகின்றது தெரியுமா, அவர்கள் எம் நாட்டவர்கள் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பினால் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும் தெரியுமா... அவர்கள் தேவையை விட நமது தேவை பல பல மடங்கு.. பேசித் தீர்ப்பதே சிறந்தது அவர்களோடு போட்டி போடும் அளவின் சிறு மடங்கும் நாம் அல்ல, புரிந்துகொள்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .