2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை மனித உரிமை பேரவைக்கு அனுப்பப்பட்டது

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கைப் படையினர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொலைசெய்ததாக குற்றம் சுமத்தும்; அறிக்கையொன்றை  ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு நேற்று திங்கட்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.

இக்கொலைக் குற்றச்சாட்டு விசாரணை மேற்கொள்ளுமாறு தன்னால் தனியாக உத்தரவிட முடியாதெனவும் பான் கீ மூன் கூறினார். இருப்பினும் மனித உரிமைகள் பேரவை போன்ற அமைப்புக்கள் இதனை மேற்கொள்ளமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் யுத்தக் குற்றச்செயல்கள் எதுவும் இடம்பெறவில்லையென இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகளுக்கான ஐ.நா.வின் உயர்ஸ்தானிகருக்கும் குறித்த அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் பேச்சாளர் மார்ட்டின் நெசக்கி தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு  எதிராக இடம்பெற்ற மோதலின்போது இலங்கைப் படையினர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொன்றதாக பான் கீ மூனினால் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கூறியது.  இருப்பினும் இரு தரப்பினரும் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாமெனவும் அக்குழு தெரிவித்திருந்தது. (DM)


You May Also Like

  Comments - 0

  • aj Tuesday, 13 September 2011 08:33 PM

    சந்தோசம் பொங்குகிறது. எல்லா புகழும் அவர்களுக்கே. மூன் இப்போது சரி ஒரு நல்ல முடிவை எடுத்து இருக்கிறார். இதோட நிண்டுவிடாது அடுத்த கட்ட , ஒரு சர்வதேச விசாரணை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
    அதனுடாக பாதிக்கபட்ட மக்களுக்கு நீதி வழங்க ஐநா மற்றும் உலகநாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இந்த தோல்வி வெளிபாடே நேற்று சமரசிங்க பேச்சி . அதும் பிள்ளை அவர்களிடம். வெட்கம் லங்காவுக்கு.

    Reply : 0       0

    S.Abdeen Thursday, 15 September 2011 12:43 PM

    மூனின் இலங்கை தொடர்பான அக்கறை அவசியமானதுதான். இதைப்போன்று மூன் சர்வதேசத்தில் ஆதிக்க சக்தி பெற்றுள்ள நாடுகளால் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களையும் மனித படுகொலைகளையும் நடுநிலை தவறாமல் விசாரணைக்கு கொண்டு வருவாரா? அல்லது பொம்மையாக இருப்பாரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .