2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அலரி மாளிகை விருந்துக்கு மக்களின் நிதி பயன்படுவதில்லை:அரசு அறிவிப்பு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.மேனகா)

தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் தினந்தோரும் விருந்துபசாரங்கள் நடத்தப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் தனது கடும் கண்டனத்தை இன்று வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இந்த விருந்துபசாரங்கள், தேர்தல் வெற்றியை நோக்காகக் கொண்டவை அல்ல என்பதுடன், அற்காக செலவளிக்கப்படும் நிதி பொதுமக்கள் நிதியிலிருந்து பெறப்பட்டவை அல்ல எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை, அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட ஊடகத்துறை பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குற்ப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் ஏனையோருக்கு நன்றாக விருந்தளிக்கும் குடும்பமாகும். அலரி மாளிகை என்பது முன்னர் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மட்டுமே வரையறுக்கப்பட்ட இடமாகக் காணப்பட்டது. அங்கு பொதுமக்கள், மதத் தலைவர்கள் அல்லது வேறு தரப்பினர் எவரும் செல்ல முடியாத வகையில் வரையறுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலைமையினை மாற்றியமைத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தினந்தோரும் அனுஷ்டிக்கப்படும் விசேட தினங்களைக் கருத்திற் கொண்டு அவற்றுடன் தொடர்புடையதான அமைப்புக்கள், பொதுமக்களைச் சந்தித்து ஜனாதிபதி தினமும் கலந்துரையாடுகின்றார். அவர்களைச் சந்திப்பதன் மூலம் வரவு செலவுத் திட்டத்துக்கான தகவல்களையும் திரட்டிக்கொள்கின்றார்.

இதற்காகப் பொதுமக்களின் பணம் செலவிடப்படுவதில்லை. இவ்வாறிருக்க, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான விருந்துபசார நிலையமாக அலரி மாளிகை அமைந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தொடர் தோல்விக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும் விருந்தே காரணமாக அமைந்துள்ளது என்பதைப் போல அவரது கருத்து அமைந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தற்போது ஒரு பலவீனமடைந்த கட்சியாக மாறியுள்ளது. அக்கட்சி பல பிரிவுகளாக பிளவடைந்து கிடக்கின்றது. அண்மையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுயேட்சைக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் சிலர் கண்ணாடி சின்னத்தில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இவ்வாறான பலவீனங்களை அக்கட்சியினர் திருத்திக்கொள்ளாமல் அரசாங்கத்தின் மீது பழிகளை சுமத்தி வருகின்றனர். நாட்டுக்கு பலம்வாய்ந்த எதிர்க்கட்சியொன்று தேவை. அந்த இடத்தை ஐ.தே.க. தவறவிடப் பார்க்கிறது. அதனால் தங்களுக்குள் உள்ள குறைகளை மறந்து கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் அக்கட்சியினர் ஈடுபட வேண்டும் என் கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0

  • Whistle Blower Friday, 16 September 2011 01:30 AM

    அப்போ NGO பணம் போல

    Reply : 0       0

    nakkiran Friday, 16 September 2011 02:42 PM

    மக்கள் வரிப்பணம் அல்ல, அது புலிகளிடம் இருந்து பறித்த தங்க காசு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .