2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அலுகோசு வேலைக்கு ஆள் தேவை

Super User   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜயந்த சமரகோன்)

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவிக்கு ஆள் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் விரைவில் கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யூ. கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

தற்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவராக கடமையாற்றுபவர் அண்மையில் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவ்வெற்றிடத்திற்கு புதியவர் ஒருவரை சேர்க்கவேண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இப்பதவிக்கு புதிய பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் அதேவேளை சிறைச்சாலைகளும் புனர்வாழ்வு நிலையங்கள் என பெயரிடப்படவுள்ளதாகவும் அவர் அவர் கூறினார்.

மேற்படி பெயர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களால் சூட்டப்பட்டதாகவும் அப்பெயர்கள் தற்போதைய நிலைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

1976  ஆம் ஆண்டின்பின் இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததால் தூக்குத் தண்டனை நிறைவேற்றுநருக்கான அவசியம் இருக்கவில்லை. இலங்கையில் இறுதியாக 1976 ஆம் ஆண்டு தங்காலையைச் சேர்ந்த சந்திரதாஸ என்பவர் தூக்கிலிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • Bala Monday, 19 September 2011 07:44 PM

    அதுக்குத்தான் அரசாங்கத்திடம் நிறைய ஆள் இருக்கே ....

    Reply : 0       0

    xlntgson Monday, 19 September 2011 09:58 PM

    ஆடுமாடுகளைக் கூடக் கொல்லாத நாட்டில் இந்த executioner பணியாளர் எதற்கு? இப்பதவியை ஒழித்துக் கட்டிவிடலாம்! அவர்களை வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பணியைத் தொடரக் கூறலாம் மாநகர slaughter அறுவை நிலையங்களுக்கு இயந்திரங்களை பயன்படுத்தலாம்.
    Our president is executive but he won't execute!

    Reply : 0       0

    sa Tuesday, 20 September 2011 01:26 AM

    sabash........ but ithellam nadimuraiku varadu.............

    Reply : 0       0

    IBNU ABOO Tuesday, 20 September 2011 03:40 AM

    இப்ப கை வசம் ஒருவர் இருக்கார். இருக்கிற பதவியோட இதையும் அவருக்கு கொடுத்தா மற்ற அலுகொசெல்லாம் இவரிடம் பிச்ச வாங்கனுமாக்கும் .

    Reply : 0       0

    meenavan Tuesday, 20 September 2011 04:59 AM

    ஆணையாளரே? விண்ணப்பங்கள் கோர வேண்டியதில்லை. களனி ஆளிடமே கொடுத்திடலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .