2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இடிக்கப்பட்ட ஸியாரத்தை மீண்டும் கட்டித்தருவதாக வாக்குறுறுதி அளிக்கவில்லை: கோட்டாபய

Super User   / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அநுராதபுத்தில் இடிக்கப்பட்ட ஸியாரத்தை (தர்கா) மீண்டும் கட்டித்தருவதாக தான் வாக்குறுதி அளிக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர்   கோட்டாபய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இலங்கையின் அநுராதபுரத்தில் இம்மாதத்தில் முன்னதாக புத்த பிக்குகள் சிலரால் இடிக்கப்பட்ட முஸ்லிம் தர்கா தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியதாக வெளியாகியிருந்த செய்திகளுக்கு தற்போது கோட்டாபய விளக்கமளித்துள்ளார்.

செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்ததுபோல இந்த தர்கா மீண்டும் கட்டித்தரப்படுவதற்கு தன்னால் உத்தரவிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தர்கா இடிப்பு தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புச் செயலரைச் சந்தித்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளில் சிலர், இந்த தர்கா மீண்டும் கட்டித்தரப்படும் என்று கோட்டாபய உத்திரவாதம் வழங்கியுள்ளார் என்ற புரிதலுடன் வெளிவந்திருந்தனர்.

கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தன்னால் ஏற்பாடு செய்ய முடியுமே ஒழிய, இடிக்கப்பட்ட தர்கா மீண்டும் கட்டித்தரப்படுவதற்கு தன்னால் ஏற்பாடு செய்ய முடியாது என்று கோட்டாபய பிபிசியிடம் விளக்கமளித்துள்ளார்.

மீள் கட்டுமானம் பற்றி பேசவேண்டுமானால் முஸ்லிம் மற்றும் பௌத்த பிரதிநிதிகள் மதவிவகார அமைச்சிடம் அவ்விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பிக்குகள் செயலை விமர்சித்தார்

தர்கா இடிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர், இப்படியான செயலுக்கு யாரும் ஒப்புதல் அளித்திருக்கவில்லை என்றும், சட்டத்தை யாரும் அவரவர் கைகளில் எடுத்துகொள்ளக்கூடாது என்றும் சமூகங்கள் இடையிலான நல்லுறவை யாரும் கெடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இந்த தர்கா நூற்றாண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது.

ஆனால், பௌத்தர்கள் புனிதமாக கருதும் ஒரு இடத்தில் அது உள்ளது என அதனை இடிப்பதற்காக சென்றிருந்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பௌத்த பிக்கு கூறினார். இந்த தர்காவை இடித்துவிட வேண்டும் என மத விவகார அமைச்சகத்தில் தாங்கள் முறையிட்டிருந்ததாகவும், ஆனால் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அதனை தாங்களாக இடித்துவிட்டதாகவும் அந்த பிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

தர்கா இடிப்புக்கு அவ்வட்டாரத்தின் முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இடித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் ஓட்டுகள் அதிகமாக உள்ள கொழும்பு உள்ளிட்ட இடங்களில் அடுத்த மாத ஆரம்பத்தில் வரிசையாக உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பிபிசி வெளியிட்ட செய்தி இணைப்பு


You May Also Like

  Comments - 0

  • meenavan Tuesday, 20 September 2011 04:46 AM

    நல்ல அரசியல் சடுகுடு விளையாட்டுதான்? யாரைத்தான் நம்புவது?

    Reply : 0       0

    neethan Tuesday, 20 September 2011 04:53 AM

    சட்டத்தை கைகளில் எடுத்த புத்த பிக்குகளுக்கு எதிராக பாதுகாப்பு செயலாளர் நவடிக்கை எடுப்பாரா?

    Reply : 0       0

    rozan Tuesday, 20 September 2011 06:49 AM

    பிக்கு அம்பு தான் அய்யா.......எய்தவன் இருக்கிறான்.....இனி பாருங்க ஸ்ரீ லங்கால எப்படி சிறுபான்மையினர் வாழுவாங்க என்று........?

    Reply : 0       0

    rozhan Tuesday, 20 September 2011 06:55 AM

    ஏன் இப்படி செய்கின்றார்கள்? தமிழர்களுக்கு முடிந்து இப்போ முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கிறார்கள்.

    Reply : 0       0

    siraj Tuesday, 20 September 2011 07:30 AM

    காட்டு மிராண்டிகளின் வேலை. ஒரு மதஸ்தலங்களை உடைத்தல் கண்டிக்கக்கூடிய விடயம். இதற்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்க்கும் என்ன வேற்றுமை? இரண்டுமே ஒன்றுதான். அது இந்து தீவிரவாதிகள்.
    இது காவி உடையில் வந்த தீவிரவாதிகள். அதற்கு காக்கிச்சட்டையும் பாதுகாப்பு அரசு மேற்காப்பு......... என்ன கொடுமை இது யாரிடம் சொல்வது வைட் அன் சீ!!!!!!!!!!!

    Reply : 0       0

    sadath Tuesday, 20 September 2011 01:51 PM

    நல்ல பல்டி அடி, அடுத்த நியூஸ் வரும் கட்டி தருவேன் என்று அது வரை பொறுப்போம்.....

    Reply : 0       0

    Mohammed Hiraaz Tuesday, 20 September 2011 03:02 PM

    ஆஹா பட்டபகலில் பாரிய இராணுவ படை பலம் உள்ள ஒரு நாட்டில் ஒரு வன்முறை கூட்டம் அமைதி இன்மையை ஏற்படுத்த இன்னொரு இனத்தவரின் நம்பிக்கை சம்பந்தமான ஒரு கட்டிடத்தை காலா காலமாக இருந்துவந்த ஒரு கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்பதும் இதற்கு எந்த எதிர் நடவடிக்கை எடுக்காது இலங்கை அரசு தன் அமைதியால் சம்மதம் தெரிவித்து இருப்பதும் உலகிற்கு முன் தெட்ட தெளிவான உண்மையாக வெளிச்சமாகி இருக்கிறது. இனி அதன் பிரதிபலிப்புகள் விளங்கும். உப்பு திண்டவன் தண்ணி பருகித்தானே ஆக வேண்டும்.

    Reply : 0       0

    xlntgson Tuesday, 20 September 2011 09:31 PM

    skulcap தொப்பியும் அவ்வாறான பரபரப்புரை ஒன்று தானோ?

    Reply : 0       0

    M H Tuesday, 20 September 2011 10:16 PM

    முஸ்லிம்களுக்கு அல்லாஹ் துணை செய்யட்டும், அநியாயகாரர்களுக்கு அநியாயம் வரட்டும். அமீன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .