2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுவர் பிரச்சினைகளை ஆராய்வதற்காக பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்கள்

Super User   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 9700 அரசாங்க பாடசாலைகளிலும் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை அமைக்கவுள்ளது.

முதலாவது சிறுவர் பாதுகாப்பு குழு கோட்டே ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமையவுள்ளது.

சிறுவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு ஒரு ஏற்பாடு தேவை. அது பாடசாலையாக இருப்பதே மிகவும் சிறந்தது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகர சiபியின் பிரதித்தலைவர் நந்த இந்திரவன்ஸ கூறினார்.

"சிறுவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன. போதைப்பொருள் பாலியல் துஷ்பிரயோகம், தொந்தரவுக்குள்ளாதல் வீட்டிலுள்ள பிரச்சினைகள், சிறுவர்களிடையே உண்டாகும் பிரச்சினைகள் பல வகையிலும் காணப்படும் பிரச்சினைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மூலம் ஆராய்ந்து தீர்க்க முடியும்" என அவர் கூறினார்.

'இந்த குழு மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை கொண்டிருக்கும். இவ்வாறாக குழுக்களை தனியார் பாடசாலைகளிலும் அமைக்க முயல்வோம்' என நந்த இந்திரவன்ஸ கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 29 September 2011 07:17 AM

    நாடே பிரச்சினைகளினால் திக்கு முக்காடுகிறது. இதற்குள் சிறுவர்களினது பிரச்சினைகளையும் இணைப்பதில் பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் அதிகாரசபை ஆராய்ந்து மேலும் சிக்கலாக்கூடாது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .