2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மருத்துவர் சுட்டுக்கொலை: கரந்தெனிய பகுதியில் பதற்றம்

Super User   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ், டி.ஜி.சுகதபால)

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இருவரால் 40 வயதான மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து பொலிஸாரும் பொதுமக்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோக சம்பவ இடத்திற்கு பொலிஸார் தாமதமாக வந்தமையாலேயே இப்பதற்ற நிலை ஏற்பட்டது. ஆத்திரமுற்ற மக்களை கட்டுப்படுத்துவதற்கு பல பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

போரகந்த அரசினர் வைத்தியசலையைச் சேர்ந்த மருத்துவர் அவரின் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இம்மருத்துவர் தனது சேவையால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் எனவும் பல சந்தர்ப்பங்களில் அவர் நோயாளிகளிடம் பணம் அறவிடுவதில்லை எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி கொலை தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.


 


You May Also Like

  Comments - 0

  • neethan Friday, 30 September 2011 08:27 PM

    நோயாளிகளிடம் பணம் அறவிடாதது கொலைக்கு காரணமோ? நம் நாட்டில் அரசியலாளர் முதல் அதிகாரிகள் வரை சம்திங் கொடுத்து தானே காரியம் ஆகவேண்டும். விதி விலக்கு மிக கம்மி.

    Reply : 0       0

    Mohammed Hiraz Friday, 30 September 2011 10:01 PM

    என்ன கொடுமை இது???? நல்லதுக்கும் காலம் அதிகமில்லை!!! நல்லவர்களுக்கும் காலம் அதிகம் இல்லையா? நாட்டில் காட்டாச்சி இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் அரசு ஆட்சியில் உள்ளது உண்மையெனில் அநியாம் செய்தோரை தண்டனையின் முன் நிறுத்தட்டும்!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .